உள்ளூர் செய்திகள்

படிக்கட்டுகள்!

மதுரை, தெற்கு கோபுரவாசல், ஆயிர வைசியர் மேல்நிலைப் பள்ளியில், 1996ல், 11ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!தமிழ் ஆசிரியர் புலவர் பாரதி சின்ன மாடசாமி, அன்பும், கண்டிப்பும் மிக்கவர். பிரபல நடிகர் விவேக் இவரிடம் தான், குரலிசைக் கற்றுக் கொண்டார். சிலப்பதிகாரம், கம்பராமாயண செய்யுள்களை கரைத்து குடித்தவர். பாடங்களை, கதைகளாக சொல்லி புரிய வைப்பார். ஒருமுறை, கணிதப்பாட வகுப்பு தேர்வில், மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தனர் பலர். வகுப்பே சோகத்தின் விளிம்பிலிருந்தது. அகத்தை, முகக் குறிப்பால் தெரிந்தவர், கணித பாட முக்கியத்துவதை, கதைகள் மூலம் விளக்கி கூறினார். பசுமரத்து ஆணி போல பதிந்தது. சுற்றி நடக்கும் இயல்பான நிகழ்வுகளை, கவிதை, கதையாக எழுதும் ஆர்வம் கொண்டவன் நான். நோட்டு புத்தகத்தில், 'படி... படி... வாழ்வில் உயர படி...' என எழுதியிருந்தேன். அதை பாராட்டி உற்சாகப்படுத்தினார். நன்றாக படித்து பொறியியல் கல்லுாரியில், ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இப்போது, என் வயது 42; மாணவர்கள் உதவியுடன், 'படிக்கட்டுகள்' என்ற அமைப்பை உருவாக்கி ஏழை எளிய மாணவ, மாணவியர் படிப்புக்கு இயன்ற உதவிகள் செய்துவருகிறேன். எல்லாவற்றிக்கும், ஆணிவேராகி உற்சாகப்படுத்தும் தமிழாசிரியரின் நினைவை போற்றுகிறேன்!- எஸ்.மலைச்சாமி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !