ஸ்டூடன்ட்ஸ் க்ரவுன்!
கோயம்புத்தூர் கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கும் மாணவன் கவி.வித்யார்த். பெற்றோர்: கவிதாசன் - கிருஷ்ணவேணி.மேடைப்பேச்சு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதை, கட்டுரை எழுதுதல், கராத்தே, ஹிந்தி போன்ற பன்முகத் திறன்கள் பெற்றுள்ள கவி.வித்யார்த் இளம் வயதில் ஒரு கவிதை புத்தகமும் வெளியிட்டுள்ளார்.எதிர்காலத்தில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக விரும்பி, +2 வில் உயிரியல் பாடப்பிரிவை எடுத்து படித்து வரும் கவி.வித்யார்த், தன் லட்சியத்தில் வெற்றிபெற சிறுவர்மலர் சார்பில் வாழ்த்துகிறோம்!ஹாட்ஸ் ஆப் வித்யார்த்!