உள்ளூர் செய்திகள்

சம்மர் டிப்ஸ்!

இந்த ஹாட்.... ஹாட் சம்மரில் அதிகம் பாதிக்கப்படுவது நம்முடைய தோல்தான். எனவே, சருமம் மங்காமல் செழுமையடைய, சீரகத்தை காய்ச்சி வடித்த தண்ணீர் குடியுங்கள். ஸ்கின் பளபளவென்று இருக்கும். அத்துடன் பழச்சாறு, காய்கறி சூப், மோர், வெள்ளரி, தர்பூசணி, இளநீர் சாப்பிடுங்க.கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் முகத்தில், 'கரும்புள்ளிகள்' ஏற்படும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய, பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவவும். எண்ணை பசை சருமத்தினரை, முகப்பருக்கள் பாடாய் படுத்தும். எனவே, எக்காரணம் கொண்டு பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும், முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.ஒவ்வொரு நாளும், நான்கு முறையாவது நல்ல சோப்பினால் முகத்தைத் தேய்த்து கழுவிக் கொள்வது நல்லது. பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்புகளை உபயோகிப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !