உள்ளூர் செய்திகள்

சுண்டல்!

ஏழாம் வகுப்பு படித்த போது, என் வகுப்பில், ஒரு ஏழை மாணவன் இருந்தான்; அந்த காலத்தில், வாரம் ஒருமுறை நீதிபோதனை பாடவேளை இருந்தது. கதைகளை இட்டுக் கட்டி, கூறுவதில் சமர்த்தன்.பள்ளி முடிந்ததும், சுண்டல் வியாபாரம் செய்வான்; அதனால், 'சுண்டல்' என அழைப்போம்.ஒரு நாள், வருகை பதிவு எடுத்தேன். இவன் பெயர் வந்ததும், சுண்டல் என்று கூப்பிட்ட நேரத்தில், ஆசிரியர் வந்து விட, மாணவர்கள், 'கொல்' என சிரிக்க, கோபம் வந்து, காரணம் கேட்டார் ஆசிரியர்.உண்மையை கூறினேன். 'அவனது ஏழ்மையை கேலி செய்யாதீங்க... உங்கள போல, மாலை நேரத்துல, விளையாடாம, சுண்டல் வித்து, குடும்ப பாரத்த சுமக்கிறான்; உங்க வயசு பிள்ள தானே... அவனுக்கும் எவ்ளோ ஆசைகள் இருக்கும்...'ஏழ்மையா பிறந்தது அவன் குத்தமா... இனி, கிண்டல், கேலி செய்யாதீங்க... முடிஞ்சா, அவனுக்கு உதவி செய்ங்க; அவன் மனச காயப்படுத்தாதீங்க...' என்றார் ஆசிரியர்.அந்த அறிவுரையை, இன்று வரை காப்பாற்றி வருகிறேன்; தற்போது என் வயது, 80.- ஜெகதீசன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !