உள்ளூர் செய்திகள்

வியப்பும் சிரிப்பும்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 2011ல், 8ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். அன்று, காலை இடைவேளை முடித்து, வகுப்புக்கு வந்தோம். ஆங்கில ஆசிரியை விஜயலட்சுமி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். திடீர் என, மாணவன் அமீப் ரகுமான், சட்டை அணியாமல் வகுப்பில் நுழைந்தான். ஒன்றும் புரியாமல் வியப்புடன் பார்த்தோம். ஆசிரியை, 'என்ன கோலமடா இது...' என்று கேட்டார். தயங்கியபடியே, 'தண்ணீரை சட்டையில் ஊற்றி விட்டான் ஒருத்தன்...' என்றான். அவன் பேச்சை இடைமறித்த குறும்புக்கார மாணவன், 'சட்டையில் ஊற்றியதால் கழட்டுன... அதையே பேன்ட்டில் ஊற்றியிருந்தா என்ன செய்வே...' என்றான். ஆசிரியை உட்பட, அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.இப்போது, என் வயது, 22; வகுப்பில் அன்று நடந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.- ந.மோகன பிரசாத், கோவை.தொடர்புக்கு: 97863 76652


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !