செய்து பாருங்கள் - நாய் குட்டி!
தேவையான பொருட்கள்: கார்ட்போர்டு பேப்பர், கத்தரிகோல், கலர்கள், பசை.செய்முறை:1) ஒரு சதுர வடிவ சார்ட் பேப்பரை எடுத்துக் கொள்ளவும். படம் 1ன் படி முக்கோண வடிவில் மடக்கவும்.2) இப்போது நாய்குட்டியின் காதுகளாக படம்-2ன் படி முக்கோணத்தின் இருமுனை களையும் முன்பக்கமாக மடிக்கவும்.3) நாய்குட்டியின் நெற்றி மற்றும் நாடியாக படம் 3ன்படி பின்பக்கம் மடிக்கவும்.4) கலர்கள்களைப் பயன்படுத்தி நாய் குட்டியின் கண், மூக்கு வாய் வரையவும்.5) நாய்குட்டியின் உடல் செய்ய மற்றொரு சதுர சார்ட் பேப்பரை எடுத்துக் கொள்ளவும். அதை படம்-5ன் படி முக்கோண வடிவில் மடக்கவும்.6) முக்கோணத்தின் ஒரு முனையை படம் 6-ன்படி முன்பக்கமாக மடக்கவும். இப்ப உடலை தலையுடன் இணைக்கவும்.நாய் குட்டி ரெடி