மரவள்ளி கிழங்கு வடை!
தேவையான பொருட்கள்:மரவள்ளி கிழங்கு - 100 கிராம்கடலை பருப்பு - 100 கிராம்பச்சரிசி - 50 கிராம்முருங்கைக் கீரை - 2 கப்சின்ன வெங்காயம் - 50 கிராம்பச்சை மிளகாய் - 3கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சோம்பு, உப்பு, எண்ணெய், பூண்டு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:துண்டுகளாக்கிய மரவள்ளி கிழங்கு, ஊற வைத்த பச்சரிசி, கடலைப்பருப்பை சேர்த்து அரைக்கவும்; அதனுடன், சோம்பு, உப்பு, முருங்கைக் கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பிசையவும்.மாவை சிறு உருண்டைகளாக்கி, வடையாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவை மிக்க, 'மரவள்ளி கிழங்கு வடை!' தயார். மாலை நேர சிற்றுண்டியாக, தேநீருடன் சாப்பிடலாம்!- தமிழ்ச்செல்வி, புதுச்சேரி