உள்ளூர் செய்திகள்

கோப்பையின் மரணம்!

குருவுக்கு தேநீர் எடுத்துச் சென்ற சீடன், அந்த கோப்பையை தவற விட்டு விட்டான். அது, உடைந்து, சுக்கு நுாறாகி விட்டது. மனம் கலங்கிய சீடன், கோப்பை துகள்களை அப்புறப்படுத்தினான். சீடன் கலங்கி நின்றது கண்டு, 'என்ன விஷயம்...' என்று கேட்டார் குரு.'மனிதர்கள் ஏன் சாகின்றனர்...' என்று கேட்டான் சீடன்.'அது இயற்கை... பிறந்த உயிர்கள் எல்லாம் இறந்து தான் ஆக வேண்டும்; மரணம் தவிர்க்க முடியாதது. எல்லாவற்றுக்கும் அழிவு உண்டு; செத்துப் போவது இயற்கை...' என்றார் குரு.உடனே சீடன், 'குருவே... உங்கள் தேநீர்க் கோப்பையும் செத்து விட்டது...' என்றான்.சுவாரசியமாக சொன்னால், இழப்பும் பொருட்படுத்தப்படுவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !