செய்து பாருங்கள்! - கேண்டில் ஹோல்டர்ஸ்
வாங்க குட்டீஸ் நாம ஒரு வித்தியாசமான கேண்டில் ஹோல்டர்ஸ் செய்யலாம்! எரியும் மெழுகுவர்த்தியை பயன்படுத்தும் போது பெரியவங்களை துணைக்கு வெச்சுக்கோங்க ஓகேவா!தேவையான பொருட்கள்: கலர் டிஷ்யூ பேப்பர்கள், சிசர்ஸ், கண்ணாடி டம்ளர், ஸ்டிக் க்ளூ, மெழுகுவர்த்தி, கிளிட்டர் க்ளூ.செய்முறை:1. ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து ஒரு கலர் டிஷ்யூ பேப்பரை வெட்டி அதில் பசையை முழுவதும் தடவி டம்ளரின் வெளிப்புறத்தில் நன்றாக ஓட்டிவிடவும். இலேசாக மடிப்பு விழுந்தாலும் கவலைப்படாதீங்க. அதுவும் நல்லாதான் இருக்கும்! வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பேப்பரை வெட்டி விடவும்.2. வேறு கலர் டிஷ்யூ பேப்பரை எடுத்து அதை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அதன் கீழ்முனையில் மற்றொரு கலர் பேப்பரை ஸ்டார் வடிவத்தில் வெட்டி ஓட்டி விட வேண்டும்.3. இந்த துண்டுகளை பேப்பர்களின் மேல்முனையை கண்ணாடி டம்ளரின் மேல் பகுதியில் உட்பக்கத்தில் ஓட்டி விடவும். இப்போது கண்ணாடி டம்ளரின் நடுவில் மெழுகுவர்த்தியை ஒட்ட வைத்து விட வேண்டும்.கரண்ட் இல்லாத நேரத்தில் இது வித்தியாசமான மெழுகு வர்த்தி விளக்காக ஜொலிக்கும்.டிப்ஸ்: அழகழகான மாடல்களில் செய்து காண்பித்திருக்கிறோம். இன்னும் உங்க கற்பனையைப் பயன்படுத்தி நீங்களும் நிறைய மாடல்கள் செய்யுங்க குட்டீஸ்!