ஒரே நேரத்தில் இருவர் அவுட்டா...
என் வயது, 67; நான், 1968ல், ஒன்பதாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! ஒரு நாள், என் தாத்தா இறந்து விட்டதாக விடுப்பு விண்ணப்பம் கொடுத்து, விடுமுறை வாங்கினேன்.வீட்டில், 'ஏன் பள்ளிக்கு செல்லவில்லை...' என கேட்டதற்கு, 'ஆசிரியர் இறந்துட்டார்; அதனால, பள்ளி விடுமுறை...' என கூறி விட்டேன்.என் துரதிர்ஷ்டம், அன்று மாலையே, என் வகுப்பாசிரியரும், தாத்தாவும் கடைத் தெருவில் சந்தித்தனர்.'உங்கள் பேரன் நீங்க இறந்துட்டதாக கூறினானே...' என்று, ஆசிரியர் கேட்க, 'நீங்க இறந்துட்டதால், பள்ளி விடுமுறை என்றானே...' என, தாத்தா கூற, என் சாயம் வெளுத்து விட்டது.அன்று, இருவரிடமும் நான் வாங்கிய, அடியும், உதையும், இன்று வரை, என்னை உண்மையே பேச வைக்கிறது; எல்லாம் நன்மைக்கே!- க.ராஜேந்திரன், மதுரை.