உள்ளூர் செய்திகள்

புளிச்சகீரை துவையல்!

தேவையான பொருட்கள்:புளிச்சகீரை - 1 கட்டுகாய்ந்த மிளகாய் - 7கடுகு, வெந்தயம் - சிறிதளவுஉப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயத்தை வறுத்து பொடியாக்கவும். புளிச்சகீரையை சுத்தம் செய்து இலைகளை ஆய்ந்து, எண்ணெயில் வதக்கவும். ஆறிய பின், விழுது போல் அரைக்கவும். அதை உப்பு சேர்த்து, எண்ணெயில் வதக்கவும். பின், பொடியை கலந்து கிளறி இறக்கவும். சுவையான, 'புளிச்சகீரை துவையல்' தயார். சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, பூரி, இட்லி, தோசையுடன் தொட்டு உண்ணலாம். சுத்தமான பாத்திரத்தில் சேமித்து, தேவையான போது பயன்படுத்தலாம்.- வி.அமுதவள்ளி, மதுரை.தொடர்புக்கு: 73958 18713


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !