உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர் மலர்!

கடந்த, 1997ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நான் காரைக்கால் நேரு நகரில், 'செர்வெய்ட்' ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த சமயம்.அப்போது சிறுவர்மலர் இதழில் பள்ளி மாணவர்களுக்கு, 'அழகான கையெழுத்துப் போட்டி' என்ற போட்டி வைத்து, நூறு ரூபாய் பரிசுத் தொகை அளித்து வந்தனர். அப்போட்டிக்கு என் மாணவ, மாணவியரையும் தயார் செய்தேன். பரிசு பெறுவதை விட உங்களின் அழகு கையெழுத்தும், உங்களின் புகைப்படமும், பேட்டியும் சிறுவர்மலர் இதழில் பிரசுரமாகும். அதுவே மிகப்பெரிய அங்கீகாரமல்லவா? என்றேன். அனைவரும் ஒரு அஞ்சல் அட்டையில் அழகாக எழுதி சிறுவர்மலர் இதழுக்கு அனுப்பினர். எங்களுக்கெல்லாம் ஒரு இன்ப அதிர்ச்சி. என் மாணவி, 'தெய்வானை' என்பவருக்கு பரிசு கிடைத்தது.சிறுவர்மலர் இதழில் இருந்து வந்த நிருபர் என்னையும், தலைமையாசிரியை மற்றும் பரிசுபெற்ற மாணவி மூவரையும், புகைப்படம் எடுத்து பேட்டியையும், சிறுவர்மலர் இதழில் வெளியிட்டிருந்தனர். என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை.நான், 25 வருட தினமலர் வாசகி. இன்றும் சிறுவர்மலர் வாசிக்கிறேன். மூன்று வயதிலிருந்தே என் மகன் சிறுவர்மலர் கதைகளை கேட்டுக் கொண்டேதான் உணவருந்துவார். இப்போது அவரும் சிறுவர்மலர் வாசகராகி விட்டார். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.என் நினைவில் நின்ற இந்நிகழ்வை சிறுவர்மலர் வாசக, வாசகியரிடம் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. இச்சந்தர்ப்பம் அளித்த சிறுவர்மலர் இதழுக்கு மீண்டும், மீண்டும் என் நன்றிகள்!வே.ஜெகதா, கடலூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !