வீ டூ லவ் சிறுவர்மலர்!
தேனீ போல் தேடித்தேடி, நல்ல செய்திகளை அள்ளி தரும், சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகன். எனக்கு வயது, 73; அனைத்து வயதினரையும், வெள்ளிக்கிழமைக்காக ஏக்கத்துடன், காத்திருக்க வைக்கிறது சிறுவர்மலர். சிறுகதைகள், கட்டுரைகள், சமையல் குறிப்பு என, அனைத்து பகுதிகளும், சுவையாகவும், கருத்து செறிவுடனும் விளங்குகின்றன.ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்... கதைகளின் இறுதியில், 'குட்டீஸ்...' என விளித்து, திருக்குறளைப் போல், எளிமையாக அறிவுரை வழங்குவது மிகவும் சிறப்பான அம்சம். பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு இல்லாத குறையை, இந்த அறிவுரை தீர்த்து வைக்கிறது.ஒவ்வொரு ஆண்டும், சிறுவர்மலர் இதழ்களை தொகுத்து, ஒரே புத்தகமாகவோ அல்லது இரண்டு புத்தகங்களாகவோ வெளியிடுங்கள். அது, மாணவ, மாணவியருக்கு பெரிதும் பலன் தரும்!- ஆர்.ராஜகோபாலன், சென்னை.