வீ டூ லவ் சிறுவர்மலர்!
பட்டதாரியான நான், திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். குடும்ப சுமை, கடன் தொல்லை, வறுமை என, வாழ்வில் சோதனைகள் அடுக்கடுக்காக வந்த போதும், 10 ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை, வாரம் தவறாமல் படித்து வருகிறேன். என் இதயத்தில், தனி இடம் பிடித்து விட்டது.அனுபவக் கட்டுரைகள் அடங்கிய, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, பள்ளி பருவத்தை படம் பிடித்து காட்டுகிறது. மாணவ, மாணவியரின் குமுறல்களை, 'இளஸ்... மனஸ்' பகுதியில், படிக்கும் போது, கண்ணீர் பெருகும்.குடும்ப தலைவியருக்கு உதவும் வகையில், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' சமையல் பகுதி சுவையாக உள்ளது. வண்ணங்களால் மிளிரும், 'குட்டி குட்டி மலர்கள்!' குதுாகலப்படுத்துகிறது. பொதுக்கட்டுரைகள் அறிவாற்றலை வளர்க்கின்றன.பக்கத்துக்குப் பக்கம், பயனுள்ள அரிய தகவல்களை அள்ளி தரும், சிறுவர்மலர் என்ற அறிவுக்களஞ்சியத்தை பாராட்ட, வார்த்தைகள் கிடைக்கவில்லை.- ஆர்.தனலட்சுமி, திருப்பூர்.