வீ டூ லவ் சிறுவர்மலர்!
ஆசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்றேன். காஞ்சிபுரம், தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய போது, சிறுவர்மலர் இதழை படிக்க ஆரம்பித்தேன். அதில் படித்த சிறுகதைகளை, சுவாரசியமாக வகுப்பில் கூறுவேன்; கட்டுரைகளில் இடம் பெறும் தகவல்களை பாடவேளைகளில் பயன்படுத்துவேன். மாணவியர் ஆர்வம் பொங்க கேட்பர்; படிப்பில் கவனம் செலுத்துவர். என் வகுப்பை தவற விடாமல் வருவர்.இப்படி ஏற்பட்ட பந்தம், ஓய்வு பெற்ற பின்பும் தொடர்கிறது. தற்போதும் தவறாமல் படித்து, என் மருமகள், பேரன், பேத்திகளுக்கு கூறுகிறேன். இது, அன்பு பாலத்தை வலிமைப்படுத்துகிறது. வாழ்வுடன் இணைந்து பயணிக்கும், சிறுவர்மலர் இதழுக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்.- டி.ஜோதிபாய், காஞ்சிபுரம்.