உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 32; பள்ளி பருவம் முதல் தினமலர் நாளிதழ் வாசகி. இணைப்பு இதழ்களை விரும்பி படிப்பேன். கோவை மாவட்டத்தில் வசித்த நான், திருமணத்திற்கு பின், பெங்களூருக்கு குடி பெயர்ந்தேன். பெங்களூரு பள்ளிகளில், தமிழ் கற்பிப்பதில்லை; அதனால், வீட்டில் கற்பிக்கிறேன். என் மகன், 4ம் வகுப்பு படிக்கிறான். அவனிடம், சிறுவர்மலர் இதழைக் கொடுத்து வருகிறேன். நன்றாக படித்து புரிந்து கொள்வதை கண்டு வியந்து வருகிறேன். சிறுவர்மலர் இதழின் எளிய நடை அதற்கு உதவுகிறது. சுவாரசியமான சிறுகதைகள் உறுதுணையாக உள்ளன. 'உங்கள் பக்கம்!' பகுதியில், ஓவியம் வரைந்து பரிசும் பெற்றுள்ளான்.சிறுகதைகளை படித்து, நண்பர்களுக்கும் கூறிவருகிறான். இதனால், பிற மொழி குழந்தைகளும், தமிழை கற்க ஆர்வம் காட்டுகின்றனர். பிற மொழி குழந்தைகளையும் தமிழ் கற்க துாண்டும், சிறுவர்மலர் இதழை மனதார வாழ்த்துகிறேன்.- ர.மஞ்சுளா, பெங்களூரு.தொடர்புக்கு: 96322 27710


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !