உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 71; தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை, சில ஆண்டுகளாக படித்து வருகிறேன். அதில் வெளியாகும், எளிமையான, ரசிக்கத்தக்க, அறிவுரைகளுடன் வரும் ஆக்கங்களை விரும்புகிறேன். இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்டத்தில் புரியும் வண்ணம் உள்ள படைப்புகள் மிகவும் கவர்கின்றன.ஓரளவே கல்வியறிவு பெற்றவர் என் மனைவி. கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சராசரி செயல்களுக்கு அப்பாற்பட்டு எதையும் யோசிக்கமாட்டார். தவறாது, 'டிவி' தொடர்களைப் பார்த்து பொழுது போக்கி வந்தார். அந்த பழக்கத்திலிருந்து மீட்க பலவாறாக முயன்றேன். சிறுவர்மலர் இதழையும் அவர் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கத் துவங்கினார். அதன் எளிமையால் ஆர்வம் தொற்றிக்கொண்டது. கதை, கட்டுரைகளை சுலபமாக வாசித்து தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதாக கூறினார். தொடர்ந்து, சிறுவர்மலர் இதழ் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கத் துவங்கியுள்ளார். கண்ட கண்ட தொலைக்காட்சி தொடர் பார்ப்பதையும் குறைத்துள்ளார். இந்த மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை, சிறுவர்மலர் இதழையேச் சேரும்!- ந.கருணாகரன், சென்னை.தொடர்புக்கு: 99652 92320


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !