உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது; 70; குடும்பத் தலைவி. சிறுவர்மலர் இதழை, 15 ஆண்டுகளாக படித்து வருகிறேன். நான் எழுதிய, 'துன்பமும் உதவியும்!' கடிதத்தை, 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதியில் படித்து, 40க்கும் மேற்பட்டோர், அலைபேசியில் பாராட்டினர். நிறைய எழுதச் சொல்லி ஊக்குவித்தனர். இது பெரும் மகிழ்ச்சி தருகிறது. நுாதனமான வாழ்க்கைப் பிரச்னைகள், 'இளஸ் மனஸ்!' பகுதியில் வருகின்றன. அவற்றுக்கு சிறப்பான தீர்வுகளையும் அறிந்து கொள்கிறேன். சமையல் குறிப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.நீதிக்கதைகளை விரும்பிப் படிப்பதுடன் சேகரித்து, மற்றவர்களுக்கும் கொடுத்துவருகிறேன். எழுத்து அறிவித்தவன் இறைவன். அதை எழுதத் துாண்டும் சக்தியாக செயல்படுகிறது சிறுவர்மலர் இதழ். அது என்றும் இளமையுடன் வெளிவர வாழ்த்துகள்!- பி.லட்சுமி, திருப்பூர்.தொடர்புக்கு: 96778 65687


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !