வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 65; தினமலர் நாளிதழை, 30 ஆண்டுகளாக படித்து வருகிறேன். ரத்த பரிசோதனை செய்யும் பணியுடன், சமூக சேவையும் செய்து வருகிறேன்.ரத்த பரிசோதனைக்கு வரும் சிறுவர், சிறுமியருக்கு, சிறுவர்மலர் இதழ் பக்கங்களை காட்டுவேன். அதில், படக்கதை, தமாசு பகுதிகளைப் பார்த்து சிரிப்பதை ரசிப்பேன். சமூக சேவைக்காக மலை கிராமங்களுக்கு, செல்லும் போது சிறுவர்மலர் இதழையும் உடன் வைத்திருப்பேன். அங்குள்ள பள்ளி மாணவ, மாணவியரிடம் தந்து படிக்கச் சொல்வேன். அண்மைக் காலமாய், நினைவுகளின் அட்சயபாத்திரமாய், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி ஜொலிக்கிறது. அகிலத்தில் மாந்தர் நலனுக்காக தொண்டாற்றி வரும் சிறுவர்மலர் இதழுக்கு, ஆண்டவனே அடித்தளம் போட்டிருப்பான் என நம்புகிறேன். இதற்காக ஆயுள் முழுதும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.- ஐ.கோவிந்தன், திண்டுக்கல்.