உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 77; சிறுவர்மலர் இதழை தவறாமல் வாசித்து வருகிறேன். முழுதும் படித்து, விமர்சனக் கடிதம் எழுதி பரிசு வாங்கியுள்ளேன். அக்கம் பக்கத்தில் வசிக்கும் மூத்த குடிமக்கள், இதற்காக பெருமை பொங்க பாராட்டி வருகின்றனர். எனக்கு பரிசு கிடைத்த போது, அவர்கள் மகிழ்ந்தது கண்டு, பெருமை கொள்கிறேன்.வயது முதிர்ந்து விட்டாலும், சிறுவர்மலர் இதழை படிக்கும்போது, குழந்தை போல் மனம் லேசாகிவிடுகிறது; மகிழ்ச்சியும், குதுாகலமும் கிடைக்கிறது. அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.கட்டுரை, நீதிபோதனை சிறுகதை, இளஸ்... மனஸ்... பகுதி எல்லாம் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் உள்ளன. அனைத்து பகுதிகளும் நல்லறிவு புகட்டுகின்றன. எந்த பகுதியையும் படிக்காமல் விட முடியாது. சிறுவர்மலர் இதழ் மேலும் வளர்ந்து மணம் பரப்ப வாழ்த்துகிறேன்.- டி.கே.கவுசல்யா, சென்னை.தொடர்புக்கு: 95516 54408


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !