வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 70; தினமலர் நாளிதழ் இணைப்பு இதழ்களில் பிடித்தது, சிறுவர்மலர்! கண்களில் குறைபாடு இருப்பதால், பேரனை படிக்க சொல்லிக் கேட்டு மகிழ்கிறேன். என் இளமைப் பருவத்தில் குடும்பத்தில் பண வசதி இல்லாததால், 4ம் வகுப்புடன் என் படிப்பை நிறுத்தி விட்டனர்; படிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். விவசாயம் செய்ய வைத்தனர். பேரக்குழந்தைகள் உதவியால் தான், சிறுவர்மலர் இதழை படிக்கிறேன். அதில் மிகவும் பிடித்தது, 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி மற்றும் சிறுகதைகள் தான்.இவற்றை என் பேரக்குழந்தைகள் அருமையாக வாசித்து புரிய வைப்பர். சிறுவர்மலர் இதழ் வரும் தினத்தை எதிர்பார்த்து வாரந்தோறும் ஆர்வத்துடன் காத்திருப்பேன்.- ஜெயலட்சுமி, சென்னை.