வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 26; ஆசிரியையாக பணிபுரிகிறேன். தினமலர் நாளிதழுடன், 20 ஆண்டாக பழகி வருகிறேன். என் தந்தை, வங்கியில் பணிபுரிபவர்; நிறைய பத்திரிகைகள் வாங்கி வருவார். அவற்றில் எனக்கு பிடித்தது சிறுவர்மலர் தான். என் குழந்தை பருவத்திலே சிறுவர்மலர் இதழில் வரும் சிறுவர், சிறுமியர் படங்களை, தனியே அமர்ந்து ஆர்வமுடன் பார்த்ததாக பெற்றோர் தெரிவிப்பர்.சிறுவர்மலர் இதழில் கதைகளைப் படித்து, புதிய கதை போல் சொல்வேன். இதை மிகவும் விருப்பமுடன் கேட்பர் என் தோழியர். இதில் வரும் படங்களைப் போல் வரைந்து பழகி, ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். கதை, கட்டுரை, கவிதை படைக்கும் ஆற்றலும் பெற்றுள்ளேன். ஓவியராகவும் திகழ்கிறேன். இதற்கெல்லாம், சிறுவர்மலர் இதழ் தான் காரணம்! தினமலர் நாளிதழ் வழங்கிய, 'லட்சிய ஆசிரியர்' விருது பெற்றுள்ளேன். பாடம் நடத்தும் போது, என் மனதிற்கு பிடித்த சிறுவர்மலர் இதழில் வரும் தகவல்களை அதிகமாக பயன்படுத்துகிறேன்!- ரெ.கயல்விழி, தேனி.