உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 26; சிறுவர்மலர் இதழை, முதன் முதலில் என் பள்ளியில் தான் பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது; படிக்கும் ஆவலை துாண்டியது. இன்று வரை தவறாமல் படித்து வருகிறேன். விருந்து என்றால் இனிப்பு மட்டுமல்ல... புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு என, பல்சுவைகளையும் கலந்தது. அப்படி உண்டால் தான் திருப்தி கிடைக்கும். அது போல, பல் சுவையில் அமைந்துள்ளது சிறுவர்மலர். பள்ளி நினைவுகள், தொடர் கதை, அறிவியல் மற்றும் அறிவு சார்ந்த கட்டுரைகள், நகைச்சுவை, படக்கதை எல்லாம் கலந்து, பன்முகமாக நிறைவு தருகிறது. அங்குராசு தரும் அறிவு தகவல்கள், சிறுகதையில் நன்னெறி கருத்துகள், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்' பகுதி தரும் சத்து மிகுந்த உணவு, வாழ்வை வளமாக்கும், 'இளஸ்... மனஸ்...' பகுதி என, புதிய விருந்தை, ஒவ்வொரு வாரமும் அளிக்கிறது.அளவில்லா மகிழ்ச்சி தரும் சிறுவர்மலர் இதழ், என்றென்றும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்.- க.கிருஷ்ணவேணி, கடலுார்.தொடர்புக்கு: 63792 17533


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !