வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 60; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். நீண்ட காலம் சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். மழலை சிற்பியர் செதுக்கும் ஓவியங்கள், 'உங்கள் பக்கம்' பகுதியில் மனதை விட்டு என்றும் மறையாது. அதிமேதாவி அங்குராசு தரும் தகவல்கள் பொதுஅறிவு களஞ்சியமாக பல்கலைக்கழகம் போல் உள்ளது என்று கூறலாம். மழலையர் சிரிப்பில் கோடி துன்பம் மறையும் என்பது போல், 'குட்டி குட்டி மலர்கள்' புகைப்படங்கள் கண்டு மலரும் தாமரை போல் மனம் புலர்கிறது. மாணவப்பருவ நினைவுகளை, 'ஸ்கூல் கேம்பஸ்' தட்டி எழுப்புகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயனுள்ளது, 'இளஸ் மனஸ்' பகுதி என்பது மிகையல்ல. அது நல்வழி காட்டும் கலங்கரை விளக்கம். புதிர் பக்கங்கள் சிறுவர்களின் சிந்தனையை தட்டி எழுப்புகிறது. மொத்தத்தில் சிறுவர்மலர் அனைவரையும் காந்தம் போல் இழுக்கிறது. பல்லாண்டுகள் வாழி நீ என வாழ்த்துகிறேன்.- வி.என்.எஸ்.மகேஸ்வரி, சென்னை.