உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 56; நாரேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றுகிறேன். சிறுவர்மலர் இதழை ஒவ்வொரு வாரமும் தவறாமல் படித்து வருகிறேன். அத்தனை பகுதிகளும் அறிவுப்பூர்வமாக மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில் உள்ளன.பள்ளிக்கால அனுபவங்களை, 'ஸ்கூல் கேம்பஸ்!' வழியாக அறிந்து மகிழ முடிகிறது. பொதுஅறிவு, படக்கதை, சிறுகதை, உங்கள் பக்கம் என அனைத்தும் சுவையாகவும், அறிவுப்பூர்வமாகவும் உள்ளன.எங்கள் பள்ளி நுாலகத்தில், சிறுவர்மலர் புத்தகங்களை சேமிப்பாக வைத்து வருகிறேன். மாணவ, மாணவியர் ஆர்வமுடன் படிக்கின்றனர். தமிழ் மொழியில் வாசிப்பு பயிற்சி அளிப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளது. எல்லா வகையிலும் உதவிவரும் சிறுவர்மலர் இதழ் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.- ப.ஜீவகன், திண்டிவனம்.தொடர்புக்கு: 98407 29953


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !