உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 62; இல்லத்தரசியாக இருக்கிறேன். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை படிப்பை முடித்துள்ளேன். திருமணமாகி, புகுந்த வீட்டுக்கு வந்தது முதல் தினமலர் நாளிதழ் வாசகியாக இருக்கிறேன். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு, சிறுவர்மலர் இதழ் உறுதுணையாக உள்ளது. இந்த இதழை கையிலெடுத்தவுடன் முதலில், 'ஸ்கூல் கேம்பஸ்!' என்ற பள்ளி நாட்களை நினைவூட்டும் பகுதியை படித்துவிடுகிறேன். இதில் பகிரும் அனுபவங்கள், என் பள்ளி பருவத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி மனதில் அசைபோட வைக்கிறது.சிறுவர், சிறுமியரின் ஓவியத்திறனை ஊக்குவிக்கும், 'உங்கள் பக்கம்!' கற்பனை திறனை பெருக்கும் விதமாக உள்ளது. அனைத்து வயதினரையும் கவரும் விஷயங்கள் அடங்கிய அறிவுக் களஞ்சியமாக திகழ்கிறது, சிறுவர்மலர் இதழ். இதன் அறிவுப்பணி சிறக்க வாழ்த்துகள்.- ரேணுகா நாராயணன், சென்னை.தொடர்புக்கு: 93600 30032


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !