உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 40. இல்லத்தரசியாக இருக்கிறேன். எனக்கு படிப்பறிவு அதிகம் இல்லை. சிறுவர்மலர் இதழை என் பிள்ளைகள் ஆர்வத்துடன் படிக்கின்றனர். அவர்கள் உதவியுடன் முயன்று படிக்கிறேன். பொது அறிவு செய்திகள் அதிகம் உள்ளன. சிரிப்பை மூட்டும், 'மொக்க ஜோக்ஸ்' தமாசுகள் அருமை.சிறுவர், சிறுமியர் திறன் வளர்ப்பதை, 'உங்கள் பக்கம்' ஓவியங்களே உறுதி செய்கின்றன. இல்லத்தரசியருக்கு சமையல் குறிப்பு தரும், 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்' சூப்பர். சனிக்கிழமை எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருப்பேன். தாய், தந்தையரை மனம் மறக்காதது போல், சிறுவர்மலர் இதழை எந்த நாளும் மறவாமல் வாழ்வேன்.- எம்.நாகஜோதி, திண்டுக்கல்.தொடர்புக்கு: 91508 36411


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !