உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது 64. கோவையில் வசித்து வரும் நான், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவர் மலர் இதழை வாரம் தவறாமல், ஆர்வத்தோடு வாசித்து வருகிறேன். சிறுவர்மலர் இதழில் பக்கங்கள் குறைவாக இருந்தாலும், 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பதை போல, மனதை நிறைவாக்கும் பல நல்ல விஷயங்கள் நிறைந்து உள்ளன. தனியாக வெளிவரும் பொது அறிவு புத்தகங்களுக்கு இணையான விஷயங்களை உள்ளடக்கிய, அறிவு களஞ்சியமாக விளங்குகிறது சிறுவர்மலர்! வாய்விட்டு சிரிக்க வைக்கும், 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி, கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூரும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, சிறுகதைகள் என, சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களின் மனதையும் மகிழ்விக்கும் அம்சங்களை வெளியிட்டு அசத்துகிறது சிறுவர்மலர். எல்லா வயதினரும் வாசிக்க, ரசிக்க, சிந்திக்க சிறந்த இதழாக திகழ்ந்து வரும் சிறுவர்மலர் மணம், திக்கெட்டும் பரவட்டும். - எல்.மணியட்டிமூர்த்தி, கோவை. தொடர்புக்கு: 77087 71321


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !