உள்ளூர் செய்திகள்

யார் கட்டியவை!

கிறிஸ்தவ மதத்தொடர்பான புனித இடங்களைக் காப்பாற்றுவதற்காக, க்ரூஸேட் என்ற போராட்டம் பல ஆண்டுகள் நடந்தது. இதை, 'சிலுவைப் போர்' என்று குறிப்பிடுவர். ஐரோப்பாவின் கிறிஸ்தவமத அரசுகள் ஒன்று சேர்ந்து அந்நியருடன் இப்போரை நடத்தின. அப்போது-பிரான்ஸ் தேசத்து லூயி 1270ல் ஆப்ரிக்காவிலுள்ள கார்த்தேஜில் தமது படைகளோடு இறங்கினார். அப்போது ஒரு சபதம், பிரார்த்தனை, செய்தார். கார்த்தேஜ் பிரான்ஸின் வசமானால் அத்துறைமுகத்தில் ஒரு பெரிய சர்ச்சை நிர்மானிக்கிறேன் என்று. ஆனால், சிறிது காலத்தில் மன்னர் லூயி, கொள்ளை நோயால் இறந்தார். சிலுவைப் போரும் கைவிடப்பட்டது. ஆனால், மன்னரின் பிரார்த்தனை மறக்கப்படவில்லை. ஆறு நூற்றாண்டுகள் வரை இது நினைவில் இடம் பெற்றிருக்கிறது. இன்று 'டுனீஷியா' என்று அழைக்கப்படும் கார்த்தேஜ், 1881ல் பிரான்ஸ் நாட்டின் பராமரிப்பின் கீழ் வந்தது.பிரெஞ்சு மதகுருவான (கார்டினல்) 'லாவிகிரி' உடனே நெடு நாளையப் பிரார்த்தனையை நிறைவேற்ற முடிவு செய்தார். உலகம் முழுவதிலுமிருந்து நிதியுதவி வேண்டி அறிக்கை விடுத்தார். சிலுவைப் போரில் பங்கு கொண்ட சந்ததியாரிடமிருந்து மட்டுமே உதவி கோரினார். ஆறு நூறு ஆண்டுகளானாலும் கூட லாவிகிரியின் வேண்டுகோளுக்கு நிறையவே பொருள் சேர்ந்தது. 1884ல் அடிக்கல் நாட்டப்பட்டது. பக்திமானான மன்னன் லூயியின் பிரார்த்தனைபடி, அற்புதமான மாதாகோவில் உருவாகி 1890 மே 15ம் தேதி ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !