உள்ளூர் செய்திகள்

யார் இவர்?

சீன தேசத்தில் ஒரு குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்தின் தலைவர் ஒரு விவசாயி. அவர் ஒரு காலத்தில் ஏழையாக இருந்தார். பட்டாளத்தில் சேர்ந்து பல ஆண்டு கள் வேலை செய்த பிறகு, கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தது. அதனால் கொஞ்சம் வசதி யாக வாழ முடிந்தது.அந்த விவசாயிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் தினமும் பள்ளிக்குச் சென்று படித்து வருவான். படிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் அவன் வயலுக்குச் சென்று வேலை பார்ப்பான். மிகவும் உற்சாக மாகவும், சுறுசுறுப்போடும் அவன் வயல் வேலைகளைச் செய்வான்.ஒருநாள்- அவன் அப்பா, ஓர் ஏழைக் குடியாவனவன் வீட்டுக்குச் சென்றிருந்தார். அந்தக் குடியானவனிடம் ஒரு பன்றி இருந்தது. அதை வாங்க வேண்டுமென்று நினைத்தார். உடனே விலை பேசினார். விலை முடிவானதும், அவர் குடியானவனிடம் பணத்தைக் கொடுத்தார். ஆனால், அப்போதே பன்றியைக் கொண்டு செல்லவில்லை.''பன்றி இங்கே இருக்கட்டும், நான் ஆள் அனுப்புகிறேன். அவனிடம் பன்றியைக் கொடுத்தனுப்பு,'' என்று கூறிவிட்டுச் சென்றார்.அன்றைக்கோ அல்லது மறுநாளோ அவர் ஆள் அனுப்பவில்லை. பதினைந்து நாட்கள் சென்ற பிறகே தம்முடைய மகனை அந்தக் குடியானவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பையன் குடியான வனிடம் சென்று பன்றியைத் தரும்படி கேட்டான். அதற்கு அந்தக் குடியானவன், ''தம்பி, இந்தப் பன்றியை உன் அப்பா உடனே கொண்டு போகாமல், பதினைந்து நாட்கள் என்னிடமே விட்டுச் சென்றதால், இந்தப் பதினைந்து நாட்களும் நான் இதற்குத் தீனி போட்டு வளர்த்திருக்கிறேன். அத்துடன் பன்றி விலையும் அன்று இருந்ததை விட இன்று அதிமாகிவிட்டது. ஆகையால், பேசிய தொகை போக மேற்கொண்டு ஏதாவது தரவேண்டும்,'' என்றான்.பையன் யோசித்துப் பார்த்தான். குடியானவன் கூறுவதிலே நியாயமிருக்கிறது என்பதை உணர்ந்தான்.''ஆம், நீங்கள் கூறுவது சரிதான். நான் இப்போதே அப்பாவிடம் சென்று இதைக் கூறிப் பணம் வாங்கி வருகிறேன். அதுவரை பன்றி இங்கேயே இருக்கட்டும்,'' என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி ஓடினான்.அப்பாவிடம் நியாயத்தை எடுத்துக்கூறி, மேலும் கொஞ்சம் பணம் வாங்கி வந்து, குடி யானவனிடம் கொடுத்தான். பிறகு, பன்றியை அழைத்துக்கொண்டு வீடு சென்றான்.இத்தகைய நேர்மையான அந்தச் சிறுவன் யாராக இருக்க முடியும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? விடை: அந்த சிறுவன் வேறு யாருமில்லை மா-சே.துங்தான். அவர் சீனாவின் முன்னாள் குடியரசு தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !