உள்ளூர் செய்திகள்

விம்பிள்டன்!

ஆண்டுக்கு ஒருமுறை, விம்பிள்டன் பற்றி, பரபரப்பாக செய்தி வரும். டென்னிஸ் விடையாட்டால் புகழ் பெற்ற நகரம் இது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன் தெற்கு பகுதியில், விம்பிள்டன் உள்ளது. இங்கு, முதலில், 'கிரோகிட் கிளப்' என்ற பெயரில், ஒரு மைதானம் ஆரம்பிக்கப்பட்டது. அதில், 'கிரோகிட்' என்ற விளையாட்டு ஆடப்பட்டது. அதுவும், டென்னிஸ் மாதிரியானது தான். ஆனால், சற்று வித்தியாசமாக இருக்கும். புல் தரையில் விளையாடியதால், 'லான் டென்னிஸ்' என்ற பெயர் ஏற்பட்டது. இந்த மைதானத்தில் தான், முதன் முதலில், 1875ல், டென்னிஸ் விளையாட்டு துவங்கியது. அதன்பின், விம்பிள்டன் போட்டி, புகழ் பெற ஆரம்பித்தது; இன்று, விம்பிள்டன் என்றால், 'டென்னிஸ்' என்று தான் புரிந்து கொள்கிறோம். விம்பிள்டனில், டென்னிஸ் ஆட, 18 மைதானங்கள் உள்ளன. இயற்கை புல்தரையில், உலக அளவில் நடக்கும் போட்டிக்கான மைதானங்கள் இங்கு மட்டும் தான் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !