உள்ளூர் செய்திகள்

11 கோடி ரூபாயில் தங்க உள்ளாடை!

தங்கள் தயாரிப்புகளை, மக்களிடம் பிரபலப்படுத்துவதற்கு, தங்களால் முடிந்த அளவு தந்திரங்களை கையாண்டு வருகின்றன, தனியார் நிறுவனங்கள். இந்த விஷயத்தில், ஒரு சில நிறுவனங்கள், வரம்பு கடந்து செயல்படுவது, வழக்கமாகி விட்டது. சீனாவின், ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஒரு நகை கடை நிறுவனம், இந்த விஷயத்தில், அனைவரையும் அதிசயிக்க வைக்கும், தந்திரத்தை கையாண்டுள்ளது. மூன்று கிலோ தங்கத்தை பயன்படுத்தி, பெண்கள் அணியும் உள்ளாடைகளை தயாரித்துள்ளது. இந்த உள்ளாடைகளின் மதிப்பு, 11 கோடி ரூபாய். சீனாவின் பிரபல மாடல் ஒருவர், இந்த தங்க நகை உள்ளாடைகளை அணிந்து, அட்டகாசமாக போஸ் கொடுத்தார். ஜொலி ஜொலிக்க வைக்கும் நகைகளுடன், வெள்ளை நிற மேல் அங்கியை அணிந்து, அவர் காட்சி அளித்தபோது, வானத்தில் இருந்து, தேவதை இறங்கி வந்தது போலவே இருந்தது. இந்த உள்ளாடைகளை செய்வதற்கு, அந்த நிறுவனத்துக்கு, ஆறு மாதங்கள் ஆனது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !