உள்ளூர் செய்திகள்

பேஸ் புக்கை விட குழந்தையே முக்கியம்!

'பேஸ்புக்' பற்றி தெரியாதவர்களை, செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களை போல், பார்க்கும் காலம் இது! இன்றைய இளைய தலைமுறையினர், ஒரு சில நிமிடங்கள் ஓய்வு கிடைத்தாலும், பேஸ்புக்கில் தான், அந்த நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால், 'பேஸ்புக்' நிறுவன உரிமையாளரும், உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான, அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க், பிறந்து ஒரு சில மாதங்களே ஆகும் தன் குழந்தை மேக்சிமாவிடம் தான், தன் ஓய்வு நேரத்தை செலவிடுகிறார். சமீபத்தில், அக்குழந்தைக்கு, நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்க கற்றுக் கொடுத்து, அவற்றை புகைப்படம் எடுத்து 'பேஸ்புக்'கில் வெளியிட்டு, 'பேஸ்புக்கை விட, என் குழந்தை தான், எனக்கு முக்கியம்...' என்று கூறியுள்ளார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !