புது ரக சவப்பெட்டி!
'லிவிங் கோகூன்' - உயிருள்ள சவப் பெட்டி என்ற, புதுரக சவப் பெட்டியை உருவாக்கியிருக்கிறார், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த, 26 வயது, பயோ டிசைனர் போப் என்ட்ரிக்ஸ். விலை உயர்ந்த மரங்களால் செய்யப்படும் பெட்டிகள் அழிந்து, மண்ணில் கலந்துவிட அதிக காலமாகும். ஆனால், இந்த பெட்டியில் அடக்கம் செய்யப்படும் உடலுடன், பெட்டியும் மறைந்து விடும்.காளான்களில் காணப்படும், 'மைசீலியம்' என்ற பொருளால் உருவாக்கப்பட்ட இந்த பெட்டியின் விலை, 1.07 லட்சம். இப்பெட்டியில் முதன் முதலாக, 82 வயது மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.ஜோல்னாபையன்