குழந்தைகளுக்காக ஒரு விழா!
துருக்கியில் ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 23ம் தேதியை, குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். 'பைராமி' என்றால், துருக்கி மொழியில், தேசிய பொது விடுமுறை நாள் என்று பொருள். 1920ல், துருக்கி சுதந்திரம் அடைந்த போது, அதன் அன்றைய தலைவர், முஸ்தபாமெகல் அட்டூர்க், 'இனி, குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம்...' எனக் கூறி, ஏப்., 23ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும், இனி, குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும் என அறிவித்தார். விழா நாளன்று, குழந்தைகள், அந்த நாட்டிற்கே உரிய, இரட்டை வண்ணமான சிவப்பு மற்றும் வெள்ளையில் ஆட்டம், பாட்டத்தை பேண்ட் இசைக்கு ஏற்ப நடத்துகின்றனர். இந்த விழா, துருக்கியின் தலைநகரமான அங்காராவில், மிகச் சிறப்பாக நடைபெறும்.இந்த சமயம், உலகம் முழுவதிலிருந்தும், குழந்தைகள் வந்து, விழாவில் பங்கு கொள்கின்றனர். யுனெஸ்கோ நிறுவனம், ஏப்., 23ம் நாளை, சர்வதேச குழந்தைகள் தினமாக அங்கீகரித்துள்ளது.— ஜோல்னா பையன்