கவிதைச் சோலை!
காந்தியைக் காணவில்லை!* மனம் பதைத்ததுஉடல் நடுங்கியதுஉண்மையிடம்ஓடினேன் - அதுஉருக்குலைந்துக்கிடந்தது!* நேர்மையை நாடினேன்அதுவோ...நீலிக்கண்ணீர்வடித்தது!* எளிமையைஎங்கு தேடியும்கிடைத்தபாடில்லை!* தூய்மையையாரோதுரத்திக் துரத்திஅடித்திருக்கின்றனர்பாவம்பேச்சுமில்லமூச்சுமில்ல!* சத்தியமோ...செத்த பிணமாய்சகதியில்!* அகிம்சையிடமிருந்தாவதுஆதரவானபதில் வராதா...எதிர்பார்த்துஏமாந்து போனேன் - அதுவள்ளலார் விரித்த கடையில்வாய்மூடிக் கிடந்தது!* இவர்களைப் பிரிந்துஅவர் இருக்க மாட்டாரே...கல்விக்கூடங்கள்கவின் நீதிமன்றங்கள்சட்டசபைபாராளுமன்றம்ஏன்மனிதநேய அமைப்புகளில் கூடமகாத்மாவைக் காணவில்லை!* மெல்ல எழுந்தேன்எதிரில் ஒரு டாஸ்மாக்எட்டிப் பார்த்தேன்...சிவப்பு நோட்டில்தேச பிதாசிரித்துக் கொண்டிருந்தார்!* கண்ணுற்ற நானோமூர்ச்சையாகிமுச்சந்தியில்விழுந்தேன்!— தேன் தமிழன், நெய்வேலி நகர்.