உள்ளூர் செய்திகள்

கவிதைச் சோலை!

உன் பெயரையே விரும்புகிறேன்என்னை குளிர்வித்தல் பொருட்டுநேற்றிரவு கனமழையைநீ தான் அனுப்பி வைத்தாயா?நான் மலர்தல் வேண்டிசெடிகளில் குலுங்கும்பூக்களுக்கு சிரிப்பைநீ தான் அள்ளி வீசினாயா?நிலவு எனக்கு பிடிக்கும் என்பதால் தான்அதன் காலடியில்நட்சத்திர முத்தங்களைஅடுக்கி வைத்திருக்கிறாயா?இருள் கண்டு பயம் கொள்ளும்குழந்தை நானென உணர்ந்து தான்ஊர்தோறும் கோவில் எழுப்பிஎன்னை பாதுகாக்கிறாயா?போதும் போதும்...மழையாய், பூவாய், நிலவாய்அறிவதை விடவும்உன்னைஉன் பெயரிலேயேஉணர விரும்புகிறேன்!— இ.எஸ்.லலிதாமதி, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !