உள்ளூர் செய்திகள்

நூறு ஆண்டு கடந்த அஞ்சல் அட்டை!

கிரீஸ் நாட்டின் வடக்கு நகரமான பால்டிக், கடற்கரை நிறைந்த பிரதேசம். இங்குள்ள மீனவர் ஒருவர், வழக்கம் போல், கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அன்று மீன்களுடன், ஒரு பழைய பீர் பாட்டிலும் கிடைத்தது. அதனுள், ஒரு அஞ்சல் அட்டை இருந்தது. 101 ஆண்டுகளுக்கு முன், ஒருவர், தன் பேத்திக்கு எழுதிய கடிதம் அது. கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த பேத்தி, அஞ்சலா எட்மான், தற்போது ஜெர்மனியில் பெர்லின் நகரத்தில் வசிக்கிறார். இவரின் தாத்தா ரிச்சர்டு பிளாட்ஸ், கடந்த, 1946ல் மரணமடைந்த தகவல், பேத்திக்கு தெரியவில்லை. கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்ற இந்த நூறு வயது கடிதம், தற்சமயம், ஹாம்பெர்க் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.- ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !