உள்ளூர் செய்திகள்

மணக்கோலத்தில் ஒரு தற்கொலை!

சீனாவின் ஜிலின் மாகாணத்தில், குவோ ஜோன்ங்பான் என்ற சிறிய நகரம் உள்ளது. இங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. இந்த குடியிருப் பின் ஏழாவது மாடியின் ஜன்னலின் விளிம்பில், ஒரு பெண் அமர்ந்திருப் பதையும், அந்த பெண், கீழே குதித்து தற்கொலை செய்வதற்கு தயார் நிலை யில் இருப்பதையும், அந்த வழியில் சென்று கொண்டி ருப்போர், பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கூச்சலிட்டனர். இந்த கூச்சல் கேட்ட அடுத்த நொடியில், அந்த அடுக்கு மாடி குடியிருப்பில், அடைக்கப்பட்டிருந்த அனைத்து ஜன்னல்களும், படீர், படீரென திறக்கப் பட்டன. ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்தவர் கள், ஒரு இளம் பெண், கீழே குதிக்க தயாராகிக் கொண்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்தனர்.குடியிருப்பில் வசித்த ஒருவர் மட்டும், சமயோசிதமாக செயல்பட்டார். அந்த இளம் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, அந்த பெண்ணின் கழுத்து மற்றும் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் அங்கு விரைந்து சென்று, அந்த பெண்ணை மீட்டனர். தற்கொலைக்கு முயன்ற அந்த இளம் பெண், திருமணத்தின் போது, மணப் பெண்கள் அணியும், வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தார். அவரிடம் விசாரித்த போது, 'நான்கு ஆண்டுகளாக, ஒரு பையனை காதலித்தேன். திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிட்டிருந்தோம். திடீரென, வேறு ஒரு பெண்ணை, அவன் திருமணம் செய்து கொண்டான். இந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால், மணக் கோலத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, மாடியிலிருந்து குதிக்க முயன்றேன்...'என்றார். அவளை காப்பாற்றியவர்கள், ' அந்த பையனை விட, நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைப்பான்...' என ஆறுதல் கூறி, அந்த பெண்ணை தேற்றினர்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !