அம்மாவை போல் பெண்!
படத்தில் காணும் பெண் யார் என தெரிகிறதா?மேற்கிந்திய தீவுகள் அணியின், முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் - மாடல் அழகி நீனா குப்தாவுக்கும் பிறந்த மகள் தான் இவர். இவரது பெயர் மசாபா குப்தா!ரிச்சர்ட்சும், நீனா குப்தாவும் திருமணம் செய்து கொள்ளவோ, சேர்ந்து வாழவோ இல்லை. இது பற்றி யாராவது மசாபா குப்தாவிடம் கேட்டால், 'அதுபற்றி எனக்கு கவலையோ, ஏக்கமோ இல்லை...' என்கிறார்.பேஷன் டிசைனராக உள்ள மசாபா, திருமணம் பற்றி கூறும் போது, 'அடுத்த, பத்து ஆண்டுகளில், திருமணம் செய்யும் நிறையப் பேர், சேர்ந்து வாழ்வர் என்று தோன்றவில்லை. ஒன்று, சேர்ந்து வாழ்வர் அல்லது ஒரு குழந்தையை பெற்று, தனித்து வாழ ஆரம்பித்து விடுவர்...' என்கிறார்.'நூலைப் போல சேலை; தாயைப் போல பிள்ளை' என்று சும்மாவா சொன்னார்கள். இந்த மாதிரி சேர்ந்து வாழாமல், குழந்தை பெற்று, ஒதுங்கிக் கொள்ளும் பெற்றோரின் அடையாள குழந்தையை எப்படி அழைக்கின்றனர் தெரியுமா? 'லவ் சைல்ட்' அதாவது, அன்பு குழந்தை!— ஜோல்னா பையன்.