தண்ணீர் விமானம்!
சமீபத்தில், கேரள அரசு சுற்றுலா பயணிகளுக்காக, வானத்திலும், தண்ணீரிலும் இயங்க கூடிய விமானத்தை, அறிமுகப்படுத்தியது. முன்னூறு குதிரை சக்தி கொண்ட ஒற்றை இன்ஜின் உள்ள இந்த விமானம், கேரளாவில் ஒன்பதாயிரம் அடி உயரத்தில், பறக்க கூடியது. இதில், ஆறு பேர் பயணம் செய்யலாம். ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால், தொடர்ந்து ஆறு மணி நேரம் பறக்க முடியும். 1910ல் பிரான்ஸ் நாட்டு இன்ஜினியரான, 'ஹென்றி பாப்ரி' இந்த விமான தொழில் நுட்பத்தை உருவாக்கினார். இதற்கு, 'லீகனாட்' என்று பெயர் சூட்டினார். பிரான்ஸ் மொழியில், 'லீகனாட்' என்றால், வாத்து என்று பொருள். வாத்து தண்ணீரிலும், கரையிலும் செயல்படுவது போல், இந்த விமானம் வானத்திலும், தண்ணீரிலும் இயங்குவதால் இப்பெயரை சூட்டினர்.— ஜோல்னா பையன்.