உள்ளூர் செய்திகள்

அக் ஷர்தாம் கோவில்!

டில்லி சென்றால் காண வேண்டிய கலை பொக்கிஷம், அக் ஷர்தாம் கோவில். இங்கு தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, கண்டு களித்து செல்கின்றனர். 1781 - 1830ம் ஆண்டுகளுக்கு இடையே வாழ்ந்த மகான், ஸ்ரீ சுவாமி நாராயணனுக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது.இங்கு, மாலையில் நடக்கும், 'வாட்டர் ஷோ' காண வேண்டியது. தீபாவளியன்று, மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்து, எண்ணெய் விளக்குகளை ஏற்றுவர். இதை பார்த்து ரசிக்க, பெரும் கூட்டம் கூடும். அத்துடன் அன்று, சிறப்பு, 'வாட்டர் ஷோ'வும் உண்டு. அது ஒரு புதிய, 'தீம்'மில் உருவாக்கப்பட்டிருக்கும்.குஜராத் மாநிலம், காந்தி நகரிலும் ஒரு அக் ஷர்தாம் கோவில் உள்ளது. அங்கும், தீபாவளியை முன்னிட்டு, மின் விளக்குகளை அணைத்து, எண்ணெய் விளக்குகளை ஏற்றி வைத்திருப்பர். இங்கு, தீபாவளியை முன்னிட்டு நடக்கும், 'அன்ன கூட்' பிரபலமானது. பதார்த்தங்களை குவித்து வைத்து, நைவேத்யம் செய்து, பக்தர்களுக்கு வழங்குவர். இதற்கு, 56 பதார்த்தங்களே போதும். ஆனால், பக்தர்களோ, நுாற்றுக்கணக்கான பதார்த்தங்களை செய்து வைத்து அசத்தியிருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !