உள்ளூர் செய்திகள்

சனி பகவானை கலங்கச் செய்த ஆஞ்சநேயர் !

எல்லாரையும் கலங்கச் செய்யும் சனி பகவானையே, ஒருமுறை ஆஞ்சநேயர் கலங்கச் செய்தார். இதனால், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டோர், ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு. எந்த வகை இன்னலையும் எதிர்கொள்ளும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர் ஆஞ்சநேயர் என்ற நம்பிக்கை, நம் மக்களிடையே உண்டு* ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி, ஆஞ்சநேயர் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடுவதால், நமக்கு சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும்* ராம நாமத்தால், ஆஞ்சநேயரை சேவிப்பதோடு, வட மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி ஆராதிக்க வேண்டும்* சஞ்சீவியான அனுமார், இன்றும் நம்முடன் இருக்கிறார். எனவே, அவரது அவதார நாளில், அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று, அனுமன் காயத்ரி சொல்லி, அவரின் அருள் பெறுவோம். அத்துடன் அவரது புகழ் பரப்பும், 'அனுமன் சாலீஸா' பாராயணம் செய்தால், நினைத்த காரியம் நடக்கும் என்பது, அனைவரின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !