உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

ஆர்.டி.கோபாலரத்தினம், புதுச்சேரி: பேசியே காரியம் சாதிப்பவர்களையும், அடுத்தவர்களை ஏவியே காரியம் சாதிப்பவர்களையும் எப்படி அழைப்பது?கெட்டிக்காரன்... சிறந்த நிர்வாகி, கடுமையான போட்டி நிலவும் இந்த உலகில், 'பிழைக்கத் தெரிந்தவன் என அழைக்கலாம். நீங்கள் குறிப்பிடும், 'குவாலிட்டீசை' வளர்த்துக் கொண்டவன் என்றும் சோடை போக மாட்டான்!எம்.சுப்புலட்சுமி, திண்டிவனம்: 'சில கிழங்கள் வெளியில், 'மகளே...' என்று அழைத்தாலும், உள்ளூர வேறு மாதிரி நினைக்கின்றனர்...' என்று கூறுகிறாள் என் தோழி; இது சரியல்ல என்கிறேன். நான் சொல்வது சரியா, என் தோழி சொல்வது சரியா?வயது ஒரு பொருட்டே அல்ல; எந்த வயதிலும், ஆண்கள், ஆண்களாகத்தான், 'பிஹேவ்' செய்வர். 'வயதானால் என்ன... மனதில் நான் இன்னும் இளைஞன் தான்...' என்று பெருமை வேறு அடித்துக் கொள்வர். இது சகஜம்; பெரிசுகளின் நடிவடிக்கை, பார்வை சரியில்லை என்றால், 'நைசாக' நழுவிக் கொள்வது நல்லது!சி.எம்.ஹெலன், பரமக்குடி: எனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகளாகின்றன. கொழுத்த, சதை பற்றுள்ள சிவப்பழகியாக நான் இல்லை என்று, என்னை வெறுக்கிறார் என் கணவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான நான், பெரும் கவலையில் உள்ளேன்...வெளித் தோற்றத்திலும், அழிந்து போகும் அழகிலும் மையல் கொள்ளும் கணவன்மார்களுக்கு, 'மைல்ட் ஷாக் ட்ரீட்மென்ட்' கொடுத்தால் திருந்த வழியுண்டு. 'அவரது உயரத்தை பார்த்தீர்களா... இவரது தொந்தி இல்லாத வயிறு நல்ல அழகு; அஜித்தின் தாடி சூப்பர்...' என்று அவ்வப்போது கள்ளமில்லாமல் சொல்வது போல் ஊசி ஏற்றுங்கள். தன்னையும், 'கம்பேர்' செய்து பார்த்து, திருந்த வழி உள்ளது. ஆனால், அவர் மனம் நோகும் அளவுக்கோ, சந்தேகம் எழும்படியோ அஸ்திரத்தைப் பயன்படுத்தி விடாதீர்கள்!எம்.மணியன், கோடாங்கிபட்டி: சினிமா நடிகையரின் திருமண வாழ்க்கை பெரும்பாலும் விவாகரத்தில் முடிவது ஏன்?விவகாரத்தில் தானே ஆரம்பிக்கிறது; முடிவு, விவாகரத்தாகத் தானே இருக்கும்!எம்.ஞானசம்பந்தன், பாலமேடு: என் அவள், என் மீது அலாதி பிரியம் வைத்திருக்கிறாள். ஆனாலும், இன்னும் இரண்டு, மூன்று பேரை அவள், 'பார்ப்பதாக' எனக்குத் தோன்றுகிறது. இந்தக் குழப்பத்திலிருந்து நான் வெளி வர வழி சொல்லுங்களேன்...சந்தேகப் பேய் உங்களை விழுங்கு முன், நீங்கள் அதை விழுங்கி, ஏப்பம் விடுங்கள். தெளிவடைந்து விடுவீர்கள்!மொ.முத்தரசன், சென்னை: நாகரிக வளர்ச்சி பெண்களை உயர்த்தி, வாழ வைக்கிறதா, வீழ வைக்கிறதா?ஒரு உண்மையை சொல்லட்டுமா? பெண்கள் முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், 'வீழ' வைக்கிறது என்றே சொல்வர். நாகரிக வளர்ச்சியுடன் பெண்கள் ஒத்துப் போவது, சமுதாயம் குறித்த அவர்களின் கண்ணோட்டத்தில் பெரும் முன்னேற்றம், மாறுதல் தெரிகிறது. பெண்களின் இந்த வரவேற்கத்தக்க மாற்றம் விரைவில் ஒரு சமூகப் புரட்சி ஏற்பட அஸ்திவாரமாக அமைந்து வருவது நன்கு புலப்படுகிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !