அந்துமணி பதில்கள்
*ஒய்.மகேஷ், விருதுநகர்: விமானத்தில் பறக்கும் போது, மொபைல் போனில் பேச முடியுமா?முடியாது... ஆனால், சாட்டிலைட் போன் மூலம் பேச முடியும்... அது ரொம்ப, ரொம்ப காஸ்ட்லி... ஒரு நிமிடத்திற்கு, 100 ரூபாய் கட்டணம்... 'ஹலோ... நீங்க நல்லா இருக்கீங்களா... அவங்க நல்லா இருக்காங்களா?' எனக் கேட்பதற்குள்ளேயே ஒரு நிமிடம் ஓடி விடும். டயலாக் ஆக பேச முடியாது... மோனோலாக் ஆகத்தான்!****ஜி.குப்தா, கோவை: துண்டு, துக்கடா கட்சிகள் எத்தனை உள்ளன நம் நாட்டில்...ஐஞ்சு, பத்து அல்ல... 250 கட்சிகளுக்கு மேல் உள்ளன... மாநிலத்துக்கு சராசரி, 10 கட்சிகள்!***** எம்.ஆர்.ராமமூர்த்தி, விழுப்புரம்: பெண்கள் உழைக்கிற அளவுக்கு, ஆண்கள் வேலை செய்வதில்லை என்பது என் அபிப்ராயம்... உங்களுக்கு...உண்மைதான்; நானும் உங்கள் கருத்துட ன் உடன்படுகிறேன். அப்பப்பா... விடிந்தது முதல் இரவு வரை எவ்வளவு, எவ்வளவு வேலைகள் பெண்களுக்கு! புரிந்து கொண்டு, பகிர்ந்து கொள்ளும் பக்குவம் என்று வருமோ, தலை நிறைய, 'ஈகோ' கொண்ட ஆண்களுக்கு!****தி.ஜெயா, மதுரை: சமீபத்தில், சென்னை சென்று வந்தேன். அங்குள்ள பஸ்சாகட்டும், புறநகர் ரயிலாகட்டும்... அதில் பயணம் செய்யும் பெண்களின் நிலை பரிதாபமாக உள்ளதே...நீங்கள் வெளியூர் பெண்மணி என்பதால், இப்படித் தோன்றியுள்ளது. சென்னை மகளிருக்கு இந்த அனுபவம், தினசரி காபி, டீ குடிப்பது போன்று பழகிப் போய் விட்டது. வேறு என்ன செய்வது? சென்னை வாழ்க்கை முறை அப்படி!*****எஸ்.கார்த்திகேயன், பண்ருட்டி: மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்கிற நம் இந்தியாவில், 35லிருந்து 40 சதவீத மக்கள், தம் அடிப்படை உரிமையான ஓட்டு உரிமையை அளிப்பதில்லையே... ஏன்?நூற்றுக்கு நூறு சதவீதமோ, 90 சதவீதமோ, உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் பதிவாவதில்லை. நம் நாட்டை விட, வளர்ந்த மேற்கத்திய நாடுகளின், வாக்குப்பதிவு படுமோசம். ஓட்டு அளிக்காதவர்கள், 'ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன...' என்ற மனநிலை உடையவர்கள். கொடுங்கோல் ஆட்சி ஒன்று அமைந்தபின் தான், இவர்களுக்கு ஜனநாயகத்தின் அருமை புரியும்!****கி.ராமன், நெசப்பாக்கம்: அதிசய செய்தி எதையாவது எடுத்து விடுங்களேன்...இதோ... அமெரிக்காவில் வளர்ப்பு நாய், பூனை, கிளிகளின் எண்ணிக்கை, 38 கோடியாம்... அதாவது, அமெரிக்க ஜனத்தொகையை விட, வளர்ப்பு பிராணிகளின் எண்ணிக்கை, ஏழு கோடியே, 80 லட்சம் அதிகம். இங்கே, மனிதனுக்கே சோறு - தண்ணி இல்லே...***** க.ராஜு, திருவள்ளூர்: மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்படாமல் இருந்து, ஆட்சி மொழியாக ஒரே மொழி மட்டும் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?மொழிவழி மாநிலங்களாகப் பிரித்ததில் தமிழகம் மட்டுமே, 'மெயின் ஸ்ட்ரீமில்' சேராமல் பின்தங்கி விட்டது. பிறமொழி அறியாத சில தான்தோன்றிகளும், சுயலாபம் கருதிய சில அரசியல்வாதிகளும் இதற்குக் காரணமாகி விட்டனர். மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்ததால், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் குறுகிய நோக்கம் கொண்ட சில கும்பல்கள் தோன்றி, பிற மொழி பேசும், குறிப்பாக, தமிழர்களை தங்கள் பகுதிகளை விட்டு வெளியேற போராடுகின்றனர். மொழிவழி மாநிலங்களாக பிரிக்கப்படாமல் இருந்திருந்தால், இப்பிரச்னைகள் தோன்றி இருக்காது.****ஆர்.தாஸ், பொள்ளாச்சி: உமக்கு பதில் சொல்ல மட்டும் தான் தெரியுமா? கேள்வியெல்லாம் கேட்க மாட்டீரா?கேள்வி கேட்டு, கேட்டு, ஒரு பதில் கூட பத்திரிகைகளில் வெளிவராத நிலையில், மற்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதே!***