அந்துமணி பதில்கள்!
மு.க. இப்ராஹிம், வேம்பார், துாத்துக்குடி:பத்திரிகைகளுக்கு அனுப்பும் படைப்புகள் வெளியாகவில்லை என்றால், மனது சோர்வாகி விடுகிறேனே, என்ன செய்ய...வரும், ஜன., 5ம் தேதி, இதழ் வரை பொறுத்திருங்கள்... அதில், ஷ்யாமா என்ற பெண்மணி எழுதியுள்ள, 'சாவியில் சில நாட்கள்' என்ற புத்தகத்தில், மிகப் பிரபல எழுத்தாளர், ராணி மைந்தனின் முன்னுரையிலிருந்து கொஞ்சம் எடுத்து, பா.கே.ப.,வில் எழுதியுள்ளேன்... அதைப் படித்தால் உங்கள் சந்தேகம் தீரும்!(இரண்டு மாதங்கள், 'அட்வான்ஸ்' ஆக உள்ளேனா! எப்படி...) * லெ.நா. சிவக்குமார், சென்னை: எவ்வளவு அவமானங்கள் ஏற்பட்டாலும், சிரித்துக் கொண்டே சமாளிக்கிறாரே, டி.டி.வி.தினகரன்?காமராஜரை நேரில் பார்த்ததில்லை, பழகியதும் இல்லை... முகம் எப்படி இருந்தாலும், மக்கள் நலம் தான் முக்கியம் என்று கருதி வாழ்ந்தவர், காமராஜர். அந்த அக்கறை எல்லாம் இவர்களுக்கு கிடையாதே...ஒரு சிரிப்பு வாத்தியாரை வேலைக்கு அமர்த்தி, 'ஈ ஈ ஈ' காட்ட பழகி இருக்கலாம்!பி.கே. செல்வராஜ், நெய்வேலி: டீ விற்று வந்தவர், பிரதமராகி விட்டார்; டீ கடை வைத்திருந்தவர், துணை முதல்வராகி விட்டார். டீ வாங்கிக் கொடுப்பவரான நீங்கள், அமைச்சராகக் கூடாதா?நான் என்ன துரோகம் செய்து விட்டேன், உங்களுக்கு... இப்படி ஒரு யோசனையை தருகிறீர்களே எனக்கு!வெ. ராம்குமார், வேலுார்: அந்துமணிக்கு, 'பாஸ்ட் புட்' பிடிக்குமா?எனக்கு பிடித்தது, பழைய சோறு, சுண்டக் குழம்பு, பக்கோடா, காராச்சேவு, முறுக்கு... இதுபோன்ற சமாசாரங்கள் மட்டுமே!* கே. சிவனேசன், சென்னை: ராணுவ ஆட்சி வந்தால், நம் நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சம் அற்றுப் போகுமா?முழுமையாக என்று சொல்ல முடியாது... 10 சதவீதமாவது இருக்கத்தான் செய்யும். உதாரணம்: சீனா!கு. கணேசன், மறைமலை நகர்: தமிழுக்காகவே வாழ்வதாக, சிலர் மேடையில் முழங்குகின்றனரே... அவர்களது தமிழ் உச்சரிப்பில், 'ல, ள, ழ'வுக்கு வித்தியாசம் தெரியாமல் முழங்குவர். இந்த, 'புலவனின்' பேச்சை நீங்கள், தோளில் போட்டிருக்கும் ஐந்து நாள் துவைக்காத அழுக்குத் துண்டு கீழே விழுவது கூட தெரியாமல், கேட்பீர்... ஒரு கட்டத்தில், 'அது, போனால் போகட்டும் போடா...' என்ற தமிழ் பாட்டை பாடியபடி, ஓடி விடுவீர்கள்! 'அது' என்பது, அந்த அழுக்கு துண்டை குறிக்கிறது!