உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

** எம்.ஆர்.ராமமூர்த்தி, காஞ்சிபுரம்: நண்பர்கள் அனைவரும் என்னை எப்போதும் புகழ்கின்றனரே...உங்களிடம் இப்போது பண ஓட்டம் அதிகமாக இருக்கிறது என நினைக்கிறேன். பண ஓட்டம் அதிகமாக இருப்பவர்களிடம் நெருக்கமாக பழகி, அவர்களை முகஸ்துதி செய்து, தம் காரியங்களை சாதித்துக் கொள்ளவே இவ்வாறு நடந்து கொள்வர். முகஸ்துதி செய்பவர்களை நம்பி விடாதீர்கள்; உங்களை மோசம் செய்யவே இந்த புகழ் மாலை.****ச.வேலு, சென்னை: 'டிவி' தொடர்கள் வர, வர படு, 'போராக' ஆகிவிட்டதே... என்ன காரணம்?ஜவ்வாக இழுக்க வேண்டிய நிர்பந்தமே இதற்கு காரணம். இதுவரை ஒரு தொடரைக் கூட பார்த்ததில்லை நான். ஓட்டலில், ஒரு மாலை வேளை, வேலை ஏதும் இல்லாமல், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு தொடரை காண நேர்ந்தது... நான்கே நான்கு காட்சிகள் - மொத்தமே, 10 வசனம் தான் இருக்கும்... அரை மணி நேரம், 'ரப்பர்' போட்டாங்க பார்க்கணுமே... எப்படித்தான் தாங்கி கொள்கின்றனரோ மக்கள்!**** சி.வள்ளி, கம்பம்: நாளிதழோ, மாத, வார, இதழ்களையோ நான் யாருக்கும் இரவல் கொடுப்பதில்லை; வாங்குவதும் இல்லை. இதனால், நிறைய பேரின் திட்டுக்களை வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது... உங்கள், 'அட்வைஸ்' என்ன?இவற்றுடன் ஆடியோ, 'டிவிடி' கேசட்டுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏசுபவர்கள் ஏசட்டும்! *வே.முத்துக்குமரன், விருதுநகர்: ஒரு பெண்ணுடன் சகோதரனாகப் பழகுகிறேன், பேசுகிறேன்; ஆனால், அந்தப் பெண் என்னை தவறான நோக்கத்துடன் பார்க்கிறாள். என்ன செய்வது?கழண்டு கொள்ளுங்கள்!***** பி.சந்திரன், திருக்கோவிலூர்: கோஷ்டி சண்டைகளற்ற கட்சியாக காங்கிரஸ் மாறும் காலம் எப்போது?பலாப்பழத்தில், 'ஈ' மொய்க்காத போது, ஆட்டோக்களில் சூடு வைக்காத மீட்டர் கட்டணம் மட்டும் வசூலிக்கும் போது, விளம்பரமே இல்லாமல், 'டிவி' சீரியல்கள் ஒளிபரப்பாகும் போது, விபத்தே ஏற்படுத்தாமல் லாரிகள் ஓடும் போது... இதெல்லாம் நடக்கிற காரியமா?**** ஆர்.மூர்த்தி, சிவகங்கை: 'தமிழா... இன உணர்வு கொள்!' என்கின்றனரே... எதற்காக?இவன் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டே இருந்தால்தானே, அவன் மாட மாளிகை கட்ட முடியும்!***** டி.எம்.தாஸ், வாடிப்பட்டி: மின்சாரம், டெலிபோன் முதலியவற்றை தனியார் துறையிடம் கொடுத்தால் ஒழுங்காக நடக்குமா?ரயில், பஸ், தேசிய நெடுஞ்சாலை இவற்றை எல்லாம் விட்டு விட்டீர்களே...***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !