உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

அ. சேகர், கோவை: புத்திசாலி குழந்தைகள், முட்டாள் தம்பதியினருக்கு பிறப்பரா?மண்ணுக்கு வாசனையா இருக்கு... அதில் தானே மல்லிகை மணக்குது! தென்னைக்கு போவதென்ன... பெரும்பாலும் கழிவு நீர்தானே... ஆனால், அதில் காய்க்கும் இளநீர்...என். மூர்த்தி, நெல்லை: ஒரு மனுஷனை எப்படி, எதை வைத்து புரிஞ்சுக்க முடியும்?அவரோட கண் அசைவை கவனம் குறையாமல் பாருங்கள்... அப்போது, அவரின் உள்ளுணர்வு, 'மேக்சிமம்' தெரிய வரும்!* மா. நவநீதன், கோவை: 'என்னுடைய அரசியல், காந்தியின் சித்தாந்தத்தைத் தழுவியது...' என்கிறாரே, ராகுல்?அப்படியானால், ஒருவேளை காந்தியின் விருப்பப்படி, காங்கிரசை கலைத்து விடுவாரோ!எஸ். விஜயன், பரமக்குடி: வீட்டிற்குள் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகளில், 'செஸ், கேரம்' மற்றும் சீட்டுக்கட்டு இவைகளில், அந்துமணிக்கு பிடித்தது எது?மூளை உள்ளவர்களுக்கு, 'செஸ்' பிடிக்கும்; நன்றாக குறி வைப்பவர்களுக்கு, 'கேரம்' பிடிக்கும்; நல்ல ஞாபக சக்தி உள்ளவர்களுக்கு, சீட்டு பிடிக்கும்... எனக்கு மூன்றுமே குறைவு!* ஜி. ராஜகோபால், சிவகாசி: தமிழகத்தில், பா.ஜ., தவிர எந்த கட்சிக்குமே பிடிக்காத, கவர்னர் ரவியை, மத்திய அரசு மாற்றுமா?பிரதமர் மோடிக்கு பிடிக்காத கவர்னர் யார் என்று, உங்கள் கேள்வியை கேட்டு இருக்க வேண்டும்... கவர்னர் மாற்றம் எல்லாம் நடக்காது!பி. மோகன்ராஜு, சென்னை: அந்துமணியின் கேள்வி - பதில் பகுதிக்கு, வி.ஐ.பி.,கள் பலர் ரசிகர்களாக இருக்கின்றனரே...உண்மை தான்... இதுவே, என்னுடைய, 'அம்பாசிடர்' ஆக தானே பதவி ஏற்றுக்கொண்ட, மணிமேகலை பிரசுரம், ரவி தமிழ்வாணனின் மூலமாகத் தான் எனக்கே தெரிய வந்தது!ச. தர்மலிங்கம், விருத்தாசலம்: தேசிய கட்சிகள், தமிழகத்தில், இரு மாநில கட்சிகளை நம்பி அரசியல் நடத்திக் கொண்டிருந்த நிலை மாறி வருகிறதா?இல்லவே இல்லை! இந்த உண்மையைச் சொன்னால் தேசிய கட்சிகளுக்கு பிடிக்கவே பிடிக்காது!வி. கோலப்பன், திருவையாறு: என் வயது 25, இன்னும் திருமணமாகவில்லை. நான், காபி, டீ சாப்பிடுவதில்லை... சிகரெட், பீடி புகைப்பதில்லை, மது அருந்துவதில்லை, வெற்றிலை - பாக்கு போடுவதில்லை... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?உங்களுக்கு வரப்போகிற மனைவி கொடுத்து வைத்தவர்... சந்தோஷப்படுகிறேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !