உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* கே. பாலமுருகன், ராமநாதபுரம்: தே.மு.தி.க., - ம.நீ.ம., - பா.ம.க., ஆகிய கட்சிகள் காணாமல் போய் விட்டதே...அச்சக அதிபர்களுக்கு, குஷியாய் போயிருக்கும்... இந்த, 'லெட்டர் பேட்' கட்சிகளிடமிருந்து, அவர்களின் அறிக்கைகளை வெளியிட, இன்னும் நிறைய, 'லெட்டர் பேடு'களை அச்சிடுவரே! பி. மோகன்ராஜு, சென்னை: கார்களில் இரவு பயணம் செய்வதை, சிலர் தவிர்த்து விடுவது ஏன்?அந்த ஒரு சிலரில், நானும் ஒருவன்! சூரிய ஒளி மறையும் முன்பே, காரின், 'ஹெட் லைட்' போடும் அவசியம் வரும் முன்பே, சேர வேண்டிய இடத்தை அடைந்து விடுவேன்.சூரிய அஸ்தமனத்திற்கு பின், பலரும், உ.பா., போட்டு விட்டு வண்டி ஓட்டுவர். அதனால், நிகழ்பவை தான் உங்களுக்குத் தெரியுமே!* என். ஆசைத்தம்பி, சென்னை: தமிழக அரசியல்வாதிகள் போல், பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவால் வழக்குகளிலிருந்து விடுதலையாக முடிவதில்லையே... ஏன்?தமிழக அரசியல்வாதிகளுடன், சினேகம் கொண்டிருந்தால், அவர்கள், 'டியூஷன்' எடுத்திருப்பர்... தப்பி இருக்கலாம்!ஆர். சுப்பு, விருதுநகர்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல் முடிவுக்கு வர என்ன செய்ய வேண்டும்?இலங்கைக்கு சொந்தமானது கச்சத்தீவு! இங்கே சென்று நம் மீனவர்கள் மீன் பிடிப்பதால், அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர். நம் மீனவர்கள் தான் திருந்த வேண்டும்!கே. சக்திவேல், கடலுார்: எனக்கு ஒரு சந்தேகம்... அழகிய பெண் ஒருத்தி என்னை கண்டு சிரித்தால், நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவது போல் தோன்றுகிறதே...இந்த 'கோதா'வில் இறங்க நான் தயாரில்லை. என், 'டீ கப்' முகத்தை கண்டு யாருமே சிரிப்பதில்லை!கே. ஜி. இப்ராஹிம், சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் தோல்வியைக் கவ்விய, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'வெற்றி, தோல்வி எங்களுக்கு புதிதல்ல... மக்கள் பணி ஆற்றுவதே எங்கள் கடமை...' என்கிறாரே...தேசிய நெடுஞ்சாலையில் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை மறிப்பதும், அரசு பஸ்கள் மீது கல் வீசி, பொது மக்களுக்கு துன்பம் கொடுப்பதுமே இவர்களது, மக்கள் பணியாக இருந்துள்ளதைப் பார்த்திருக்கிறோமே!பி. ராஜேஷ், சேலம்: பா.ஜ.,வின் சுப்பிரமணியசாமி, என்ன செய்கிறார்?அரசியலில் ஈடுபட்டுள்ள அவர், இத்தனை ஆண்டுகளில் என்ன செய்து விட்டார்! இனியும் என்ன செய்து விடப் போகிறார்! இது தான் அவரின் கதை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !