அந்துமணி பதில்கள்!
* கி. வேலுமணி, சேலம்: வாழ்வில் சுகமானது எது?எதன் மீதும் பற்றின்றி, அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு வாழ்வது... ஆனால், சாமானியர்களான நம்மால் முடியுமா?மோ. லதா, சென்னை: விரைவில் மருமகள் வர இருக்கிறாள்... நான் மாமியாராகப் போகிறேன்... எனக்கு அறிவுரை கூறுங்களேன்...விரைவில் திருமணம் முடிந்து, உங்கள் வீட்டிற்கு வர இருக்கும் பெண்ணை, நீங்கள் பெற்று எடுக்காத மகளாக நினைத்து நடந்து கொள்ளுங்கள்... எல்லாம் சுபமாக நடக்கும்!கே. பிரபாகர், சென்னை: இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளும், தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனவே...நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேனே... நம் மீனவர்கள் மீது தான் தவறு! அவர்கள் எல்லை தாண்டுகின்றனர்... அதனால், கைதாகின்றனர்!பி. மோகன்ராஜு, சென்னை: வெளிநாட்டு, உ.பா.,விற்கும், நம் நாட்டு, 'சரக்கிற்கும்' உள்ள வித்தியாசத்தை, லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்லுங்களேன்...அவர், 'விஸ்கி' மட்டும் தான் எடுப்பார்... அதுவும், ஸ்காட்லாந்தில் தயாரிக்கப்படும், 'பிளாக் லேபில்' தான். தற்போது, 'கொரோனா'வால் அது கிடைக்கவில்லையாம்; அதனால், உள்நாட்டு தயாரிப்பான, 'ராயல் சேலஞ்ச்' உ.பா.,விற்கு மாறி விட்டாராம். 'ரெண்டும் ஒரே, 'டேஸ்ட்' தான்...' என்கிறார்!பி. மோகன், மதுரை: என் நண்பன், 'செவிடன்' ஆக உள்ளானே...நல்லவற்றை கேட்க விருப்பம் உள்ளவராக இருப்பார் போலும்!ஆர். ஜெயகுமாரி, சென்னை: தங்களின் நண்பர் காஷ்மீர் பண்டிட், ரோமேஷ் குமார் மட்டு எப்படி இருக்கிறார்?நன்றாக இருக்கிறார்... அவ்வப்போது கைப்பேசியில் தொடர்பு கொள்கிறார்; நேரில் பார்த்து கொள்ளை காலம் ஆச்சு. பெங்களூரு, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் தலைமை செய்தியாளராக இருந்தவர், தற்போது, வேறு பணியில் இருக்கிறார்!அம்பை தேவா, சென்னை: எவ்வளவு துாரம் தனியாக உங்களால், 'டிரைவ்' செய்ய முடியும்?சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் தனியாகவே வண்டியை செலுத்த முடியும். ஒரு மணி நேரத்தில், 100 கி.மீ., கடந்து விடுவேன்! * கி. ரத்தினம், சென்னை: எதை, விலை மதிப்பென்று கூறலாம்?பிறருக்கு, காலமறிந்து செய்யும் உதவிகளை விலை மதிப்பென்று கூறலாம்!